முன்பள்ளியில் வாள்வெட்டு தாக்குதல்; 3 குழந்தைகள் உள்ளிட்ட ஐவர் உயிரிழப்பு – பிரேஸிலில் சம்பவம்

பிரேஸிலில் 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய வாள் வெட்டுத் தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேஸிலின் தென் பிராந்தியத்திலுள்ள முன்பள்ளி ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (04) இடம்பெற்றது.

உயிரிழந்தவர்களில் 2 வயதுக்கு குறைந்த மூன்று குழந்தைகளும் இரண்டு ஊழியர்களும் அடங்குகின்றனர்.

தாக்குதல்தாரி, ஆயுதத்தால் தன்னை தாக்கிக்கொண்ட நிலையில், வைத்தியசாலையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சண்டா கேட்டரினா ( Santa Catarina) மாநிலத்தில் மூன்று தினங்களுக்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

Be the first to comment

Leave a Reply