இணையத்தளம் ஊடாக A/L பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய ஏற்பாடு

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு விண்ணப்பங்களை இணையளத்தளம் ஊடாக (Online) விண்ணப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித தெரிவித்தார்.

அத்துடன், பரீட்சைக்கான தேசிய மற்றும் சர்வதேச பாவனைக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று (04) வௌியாகிய நிலையில், http://www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கமைய மூன்று இலட்சத்து ஆயிரத்து எழுநூற்று 77 பரீட்சார்த்திகள் 2020 உயர் தர பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

இதில் 194,297 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதனிடையே, விண்ணப்பதாரர்கள் 86 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply