நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு


நாடளாவிய

ரீதியில் பயணக்

கட்டுப்பாடு!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது, சூழ்நிலைகள் மற்றும் பிரதேசங்களுக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்தள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும் நிலைமையை கருத்திற் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் அல்லது நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் இன்று மாலை வேளையில் கூட எடுக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போது காணப்படும் நிலையில் ஊரடங்கு அவசியமற்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Be the first to comment

Leave a Reply