வடக்கில் இன்றைய கொரோணா தொற்று

வியாபாரிகள், ஆசிரியர், மருத்துவ ஊழியர், பல்கலைக மாணவர், பிரதேசசபை உறுப்பினர் உட்பட்டவர்களுக்கு தொற்று!

யாழ்.பரிசோதனைக்கூட முடிவுகளின் படி இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் வைத்தியசாலை ஊழியர், பொலிஸ் உத்தியோகத்தர், ஆசிரியை, பிரதேச சபை உறுப்பினர், நுண்கடன் நிறுவன ஊழியர், யாழ்.பல்கலைக்கழக மாணவர் உள்ளடங்குவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவருடைய தகவலின் அடிப்படையில்,

நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டவர்களில் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன்,

சண்டிலிப்பாயில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நுண்கடன் வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்,

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஆகியோரும், மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரும், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் இருந்த ஆசிரியை ஒருவரும் (கண்டிக்குச் சென்று திரும்பியவர்)

மன்னார் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி, பூவரசங்குளம் வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுக்கு சிக்சைக்காகச் சென்றவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் கொடிகாமம் சந்தை வியாபாரிகள் நால்வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனையவர்கள் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கில் இன்று 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply