மூடப்பட்டது கசூரினா சுற்றுலா மையம் நடந்தது என்ன!!!

மூடப்பட்டது கசூரினா சுற்றுலா மையம் நடந்தது என்ன!!!

கொரோனா கட்டுப்பாட்டு வாரம் தொடங்கியது! கசூரினா சுற்றுலா மையம் மூடப்பட்டது!

அதிகரித்துவரும் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் ஏற்பாட்டில் கொரோனா தடுப்பு வாரம் இன்று தொடங்கியது.

முதல் நாளான இன்று சுகாதார நடவடிக்கைகள் இறுக்கமாக அவதானிக்கப்பட்டன. பேருந்துகள், ஏனைய வாகனங்களில் பயணித்தவர்கள் சுகாதார நடைமுறைகளை பேணுவது தொடர்பில் இறுக்கமாக அறிவுறுத்தப்பட்டனர்.

இதேவேளை காரைநகர் கசூரினா கடற்கரையில் நேற்று நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுகூடியிருந்தமை அவதானிக்கப்பட்டது. அவர்கள் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார நடைமுறைகைளை அவர்கள் கைக்கொள்ளாமையினால் காரைநகர் கசூரினா கடற்கரை மக்கள் செல்வதற்கு சுகாதாரத் தரப்பினரால் இன்று தடை விதிக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாட்டுச் செயற்பாடு ஒரு வாரத்துக்கு தொடரும் என்று சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்

Be the first to comment

Leave a Reply