மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான சட்ட நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் மாவட்ட ரீதியில் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பொது மக்கள், வர்தகநிலைய உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நடவடிக்கை மன்னர் பொலிஸாரால் இடம் பெற்று வருகின்றது. \

குறிப்பாக முககவசம் அணியாமல் நடமாடுதல், சமூக இடைவெளியை பின்பற்றாது செயற்படும் பொது மக்கள் மீதும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்தக நிலையங்கள் மீதும் கிருமி தொற்று நீக்கிகள் தெளிக்கும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் இரு பகுதியாக இன்றைய தினம் காலை தொடக்கம் மன்னார் பஸார் பகுதியில் விசேடமாக பொலிஸார் இணைந்து அவதானிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அடிப்படையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார நடை முறைகளை பின்பற்றாமல் பொது இடங்களில் நடமாடிய நபர்கள் மீதும் வர்தகநிலைய உரிமையாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த அவதானிப்பு நடவடிக்கை மன்னார் பஸார் பகுதி, பேருந்து நிலையம் உட்பட மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

Be the first to comment

Leave a Reply