பாடசாலைகளை இப்போது திறக்க கூடாது! முக்கிய வேண்டுகோள்

இலங்கையில் வேகமாக பரவி வரும் புதிய மாறுபாட்டிற்கு குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவதால், பாடசாலைகளை திறக்கப்படக்கூடாது என்று கொரோனா தொடர்பான முன்னணி ஆராய்ச்சியாளரும், ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் தலைவருமான பேராசிரியர் நீலிகா மாலவிகே மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளை மூடுவதற்கு எடுக்கப்பட்ட முடிவை வரவேற்றுள்ள அவர் சிறுவர்களுக்கு கொரோனாப் பரவும் வாய்ப்பைக் குறைப்பதன் மூலம் தொற்றுநோயைத் தடுக்கமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

அசல்’ SARS – COV2 வைரஸை விட சிறுவர்கள் தற்போதைய இந்த கொரோனா மாறுபாட்டால் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் இளையவர்கள் மத்தியிலும் இந்த கொரோனா நோய் பரவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று பேராசிரியர் மாலவிகே கூறியுள்ளார்.

மாணவர்களை பல மாதங்களாக கல்வியில் இருந்து தூரத்தில் வைத்திருப்பது மிகவும் நியாயமற்றது. மேலும் ஒரு சிறு தொகையினருக்கு மட்டுமே இணையம் மூலம் கற்றலுக்கான வசதிகள் இருப்பதை நாம் அறிவோம்.

எனினும் இப்போது நாங்கள் உயிரைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு எந்த வகைகளையும் இறக்குமதிகளை செய்யாதிருப்பதை உறுதிச்செய்யவேண்டும். இத்தகைய இறக்குமதி சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் டீ.1.1.7, ருமு மாறுபாடு இருப்பதை அடையாளம் கண்டுள்ளோம். உலக சுகாதார மையம் தற்போது உலகில் SARS – COV2 மூன்று வகைகளை பெயரிட்டுள்ளது. டீ.1.1.7 இன் பரிமாற்றம் ஏனைய தொற்றுக்களை விட 50மூ அதிகமாக இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது, அதனால்தான் இது VOC என பெயரிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply