தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 215 பேர் கைது – அஜித் ரோகண

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின் பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 215 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 857 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் என அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று முதல் மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் குறித்து சுற்று வளைப்பு முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply