டி – 20 போட்டியை மிஞ்சியவாக்கு எண்ணிக்கை நடிகர் கமல் தோல்வி

டி – 20 போட்டியை மிஞ்சிய
வாக்கு எண்ணிக்கை

நடிகர் கமல் தோல்வி!

‘டி -20’ போட்டியை மிஞ்சும் அளவுக்கு, நடிகர் கமல் போட்டியிட்ட, கோவை தெற்கு தொகுதியில், வாக்கு எண்ணிக்கை பரபரப்பை கூட்டியது.இறுதியில் குறைவான வாக்குகளில், கமல் தோல்வியை தழுவியது, ம.நீ.ம., கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் முறையாக, தமிழக சட்டசபை தேர்தலை சந்தித்த, மக்கள் நீதி மய்யம் கட்சி, ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை.

ஆனால், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல், கடைசி வரை எதிர்தரப்பினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த கமல், பின்னர் குறைந்த பட்ச எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தார். 26வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், பின்னடைவில் இருந்த கமல், அடுத்த இரண்டு சுற்றுகளில் முன்னிலை பெற்றார்.ஆனால், இறுதி கட்டத்தில், 1,628 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரேஞ்சுக்கு பேசப்பட்ட கமல், கடைசியில் அவர் போட்டியிட்ட தொகுதியிலும் வெற்றி பெறாமல் போனார்.

இது குறித்து, ம.நீ.ம., கட்சியினர் கூறியிருப்பதாவது:

திராவிட கட்சிகளை கூட திருத்தி விடலாம். ஆனால், தமிழக மக்களை திருத்த வேண்டும் என்றால், நிறைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகள், அ.தி.மு.க.,வுக்கு போனது ஆச்சரியமாக உள்ளது. ஆனாலும், ம.நீ.ம.,வை பொறுத்தவரை, இது முன்னேற்றத்திற்கான பாதையே.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply