கிளிநொச்சியில் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது!!!

பல இலட்சம் ரூபா பெறுமதியிலான போலி நாணயத் தாள்களுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளால். கிளிநொச்சி பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது எட்டு லட்சத்து பத்தாயிரம் ரூபா மதிப்புள்ள 1000 ரூபா போலி நாணயத்தாள் இவ்வாறு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபர் போலி நாணயத்தாள்களை சந்தேகத்திற்கிடமான வகையில் பையில் எடுத்து செல்லப்படுகின்றமை தொடர்பில் பொலிஸ் விசேட பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து பொலிஸ் விசேட பிரிவினரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த சந்தேக நபரை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பையில் எட்டு லட்சத்து பத்தாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் காணப்பட்டுள்ளது. அதனை மீட்ட பொலிசார் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியைச்சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை எனவும், சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த போலி நாணயத்தாள்களின் பெறுமதி தொடர்பில் கணக்கிடப்பட்டு வருவதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

Be the first to comment

Leave a Reply