ஆட்சி மாற்றத்தை நோக்கிய வெற்றி முகத்தில் திமுக கூட்டணி! முதல் முறையாக முதல்வராகும் ஸ்டாலின்!

ஆட்சி மாற்றத்தை நோக்கிய வெற்றி முகத்தில் திமுக கூட்டணி! முதல் முறையாக முதல்வராகும் ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2021 தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆட்சி மாற்றத்தை நோக்கியதான வெற்றி முகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளதையடுத்து, முதல் முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தெரிவாகும் நிலை உறுதியாகியுள்ளது.

தற்போதைய நிலையில் 154 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

234 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஆட்சி அமைப்பதற்கு 118 இடங்களில் வெற்றி பெற்றாலே போதும் என்ற நிலையில் 150 இற்கு மெற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

இதையடுத்து தொடரச்சியாக 10 ஆண்டுகள் நிலவி வந்த அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

காலம் சென்ற செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி 2011 ஆம் ஆண்டு, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தொடரச்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தது.

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சி-அதிகார போட்டியில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பங்கள் உள்ளிட்ட காரணங்களால் பலவீனமடைந்து ஆட்சியை பறிகொடுக்கும் பரிதாப நிலைக்கு அதிமுக சென்றுள்ளது.

இந்நிலையில், அதிகாரபூர்வ முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாக திமுக கட்சி தனித்து 118 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும் பாஜக முத்த தலைவருமான ராஜ்நாத் சிங் மு.க.ஸ்டாலின்னு வாழ்த்து தெரிவித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply