தம்மிக்க தயாரித்த கொரோனா பாணி பயனற்றது என ஆய்வில் உறுதியானது!

தம்மிக்க தயாரித்த கொரோனா பாணி பயனற்றது என ஆய்வில் உறுதியானது!

கேகாலையை சேர்ந்த தம்மிக்க பெரேரா தயாரித்த கொரோனா பாணி கொரோனாவில் இருந்து எவ்வகையிலும் பாதுகாப்பளிக்கவில்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் உத்தரவுப்படி ராஜரட்டை பல்கலைக்கழகத்தால் அனுராதபுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 68 கோவிட் 19 நோயாளிகளுக்கு தம்மிக்க தயாரித்த கொரோனா பாணி வழங்கி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இதனை எடுத்துக்கொண்டு எவரிடத்திலும் எந்தவொரு முன்னேற்றமும் காணப்படவில்லை என ராஜரட்டா பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சோ்ந்த டாக்டர் சேனக பிலபிட்டிய ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போது கூறினார்.

தம்மிக்கவின் இந்த கொரோனா பாணியை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர் ஊடகங்கள் முன்னிலையில் அருந்திய நிலையில் இந்த பாணி குறித்த நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டது.

எனினும் இதனை அருந்திய பின்னரும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கொரோனா தொற்றுக்குள்ளகி பாதிக்கப்பட்டு மீண்டார்.

இந்நிலையில் ஆராய்ச்சிகளின் பின்னர் இந்தப் பாணி கொரோன தொற்று நோயில் இருந்து பாதுகாப்பளிப்பதில் பயனற்றது என சுகாதார அமைச்சு நிபுணர் குழு அறிவித்தது.

இதேவேளை, இலங்கைக்கு தடுப்பூசி கிடைத்த பின்னர் தான் கைவிடப்பட்டதாக கடந்த மாதம் தம்மிக்க பெரேரா கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கிடையில் அவரது பாணி மருந்து பயனற்றது என ஆய்வுகளின் பின்னர் அறிவிக்கப்பட்டமை குறித்து தம்மிக்க பெரேரா இதுவரை எந்தக் கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை

Be the first to comment

Leave a Reply