தமிழ் நாட்டில் ஒரே நாளில் அதிகூடிய பலியெடுப்பு: தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு 14 ஆயிரத்தை கடந்தது!

தமிழ் நாட்டில் ஒரே நாளில் அதிகூடிய பலியெடுப்பு: தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு 14 ஆயிரத்தை கடந்தது!

ஒரே நாளில் அதிகூடிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்று (எப்-30) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 18 ஆயிரத்து 692 ஆக பதிவாகியதன் மூலம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 2வது நாளாக 5ஆயிரத்தை கடந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் 5 ஆயிரத்து 473 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 42 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 3 இலட்சத்து 33 ஆயிரத்து 804 ஆகவும் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 4 ஆயிரத்து 774 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 11 இலட்சத்து 66 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 113 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை முதல் முறையாக 14 ஆயிரத்தை கடந்து 14 ஆயிரத்து 46 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 128 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply