15 கடுகதி புகையிரத சேவைகள் மே 1 முதல் இடைநிறுத்தப்படவுள்ளன: இலங்கை புகையிரத திணைக்களம்

நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேச கடுகதி ரயில் சேவைகளை இடைநிறுத்தவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மே முதலாம் திகதி முதல் மேற்படி ரயில் சேவைகள் இடைநிறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிருந்து வெளி மாவட்டங்கள் செல்லும் மற்றும் கொழும்பு கோட்டை நோக்கி வரும் 15 ரயில் சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்படவுள்ளன.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுப் பரவலானது அதிகரித்து வருவதனால் மேற்படி ரயில் சேவைகள் இடைநிறுத்துவதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply