மூன்று மாவட்டங்களில் சில இடங்களில் உடன் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு!

மூன்று மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மாத்தளை, குருணாகல் , மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை – தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல காவல்துறை அதிகார பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குருணாகல் – பன்னல காவல்துறை அதிகார பிரதேசம் மற்றும் உடுபத்தாவ, கல்லமுன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்

மொனராகலை – சியம்பலாண்டுவ காவல்துறை அதிகார பிரிவின் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார். 

Be the first to comment

Leave a Reply