சீனபாதுகாப்பு அமைச்சரின் வாகனத்தொடரணிக்காக பொதுமக்களின் வாகனங்களை நிறுத்திவைத்த பொலிஸார்-எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு கோரிய நபர் கைது

சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகனதொடரணிக்காக பொதுமக்களின் வாகனங்களை போக்குவரத்து பொலிஸார் நிறுத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
சீன பாதுகாப்பு அமைச்சரின் வாகனதொடரணி செல்வதற்காக பொதுமக்களின் வாகனங்கள் பயணிப்பதை போக்குவரத்து பொலிஸார் நிறுத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் குறிப்பிட்ட பகுதியில் காணப்பட்ட வாகனங்களின் ஒலியை எழுப்பி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கடமைகளிற்கு இடையூறு விளைவித்தமை சட்டவிரோதமாக மக்களை ஒன்றுகூடச்செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 31 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் காணப்படுகின்ற வீடியோவை அடிப்படையாக வைத்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சீன அமைச்சர் ஒரு இராஜதந்திரிஇஉலகின் வல்லரசுகள் ஒன்றின் அமைச்சர் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அவ்வாறான நபர்களிற்கு இலங்கை ஆகக்கூடிய பாதுகாப்பை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாகவே பொதுமக்களின் வாகனங்கள் பயணிப்பதை நிறுத்தி வைத்ததாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply