1451 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

இன்று (29) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 1,466 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 15 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.

எஞ்சிய 1,451 பேரில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 228 பேர், கம்பஹா மாவட்டத்தில் 209 பேர், கண்டி மாவட்டத்தில் 86 பேர், யாழ். மாவட்டத்தில் 10 நபர்கள், புத்தளம் மாவட்டத்தில் 34 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 47 நபர்கள், அம்பாறை மாவட்டத்தில் 19 பேர், பதுளை மாவட்டத்தில் 47 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 54 நபர்கள், வவுனியா மாவட்டத்தில் நால்வர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 பேர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் மூவர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

கோட்டை பகுதியில் 08 பேர், கொம்பனித்தெரு பகுதியில் நால்வர், கொள்ளுப்பிட்டியில் இருவர், பம்பலப்பிட்டியில் ஐவர், பொரளை பகுதியில் 18 பேர், மருதானை பிரதேசத்தில் மூவர், கிரேண்ட்பாஸ் பகுதியில் மூவர் மற்றும் மட்டக்குளி பகுதியில் ஐவர் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் மொத்தமாக 228 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்

அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டிய பகுதியில் 16 பேரும் பொத்துவில் பகுதியில் மூவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிரதேசத்தில் 30 பேர், அக்போபுர பகுதியில் இருவர், கோமறன்கடவல பிரதேசத்தில் நால்வர், கந்தளாயில் நால்வர், மொரவெவ பகுதியில் 07 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பிரதேசத்தில் 25 பேருக்கும் ஹங்குரன்கெத்த பகுதியில் ஒருவருக்கும் ஹட்டன் பகுதியில் இருவருக்கும் கந்தப்பொல பகுதியில் ஐவருக்கும் உடபுஸ்ஸல்லாவ பகுதியில் 08 பேருக்கும் கொத்மலை பகுதியில் நால்வருக்கும் வட்டவளை பகுதியில் 09 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

மட்டக்களப்பு பிரதேசத்தில் ஒருவர், ஏறாவூர் பகுதியில் ஒருவர், களுவாஞ்சிக்குடி பகுதியில் ஒருவர், கல்லாறு பகுதியில் ஒருவர், காத்தான்குடி பகுதியில் 06 பேர், வாழைச்சேனை பகுதியில் மூவர் அடங்கலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, நாட்டில் இதுவரையில் 104,953 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

95,083 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் (28) மேலும் கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 661 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply