இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் கொவிட் 19 கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திவுலபிட்டிய மற்றும் பேலியகோட கொவி்ட் -19 கொ ரோனா கொத்தணியில் 5 ஆயிரத்தை நெருங்கியது.

நேற்றைய தினம் கொவிட் -19 கொரோனா தொற்றாளர் கள் 541 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 42 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங் களில் சேர்ந்தவர்கள், ஏனைய 499 பேர் திவுலபிட்டிய மற் றும் பேலியகோட கொரோனா கொத்தணியில் நெருங் கிய தொடர்பு கொண்டவர்கள் என கொவிட்- 19 பரவு வதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திவுலபிட்டிய மற்றும் பேலியகோட கொவிட் – 19 கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றாளர் களாக 4 ஆயிரத்து 939 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள னர் .

தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொ த்த எண்ணிக்கை 8ஆயிரத்து 413 ஆகும்.

தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 464 என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையில் 3,933 பேர் பூரண குணமடைந்து வைத்திய சாலைகளிருந்து வீடு திரும்பியுள்ளதாகச் சுகாதார அமை ச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply