இனவாதிகளை திருப்திப்படுத்தவா இந்த அநியாய கைது? ரிஷாட் விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் – பஸார் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்றுவியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

“இனவாதிகளைத் திருப்திப்படுத்தவா இந்த அநியாயக் கைது” – “மக்கள் சேவகன் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்” – போன்ற வாசகங்கள் பொறிப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறுஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் அதிகாலையில் கைது செய்யப்பட்டதையிட்டு வேதனையடைவாதகவும், நாடாளுமன்ற உறுப்பினரான அவரை கைது செய்வதாகச் சபாநாயகருக்குக் கூட அறிவித்தல் விடுக்கப்படவில்லை எனவும், குறித்த கைதினை வண்மையாக கண்டிப்பதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். எனவே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ரிஷாட் பதியுதீனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு குறித்த கைதினை கண்டித்ததோடு, உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன் வைத்தனர்.

Be the first to comment

Leave a Reply