இந்திய மீனவர்களுடனான தொடர்பினை தவிர்க்குமாறு வடக்கு மீனவர்களுக்கு ஆலோசனை

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச கடற்பிராந்தியங்களில் இந்திய மீனவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதை தவிர்க்குமாறு வட பகுதி மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பணக் கொடுக்கல் வாங்கல், பண்டமாற்று போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் மீனவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மஞ்சள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கொண்டுவருவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களத்தின் கடற்றொழில் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார பாதுகாப்புடன் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் கொரோனா அச்சுறுத்தலிலிருந்து நாட்டின் மீனவர்களை பாதுகாக்க முடியும் என கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply