மரக்கறி விலைகள் சடுதியாக அதிகரிப்பு

மரக்கறிகளின் விலைகளானது பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு அது மூடப்பட்டுள்ளமையால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக அச்சம்மேளனம் அறிவித்துள்ளது.


தற்போதைய சூழ்நிலையைக் கையாளுவதில் அரசாங்கமானது தோல்வியுற்றுள்ளது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய அமைப்பாளரான நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன் நுகர்வோர் அதிக விலை கொடுத்து மரக்கறி வகைகளைக் கொள்வனவு செய்வதில் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தொற்றுநோய்க்கு மத்தியில் விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடுவது அவசியமானதாகும்.

இது தொடர்பில் அரசாங்கமானது உடனடியாகக் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .

Be the first to comment

Leave a Reply