பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் இலங்கையிலும்! மருத்துவ கலாநிதி சந்திம ஜீவனந்தர தகவல்

பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ கலாநிதி சந்திம ஜீவனந்தர இதனை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் பரவிவரும் பி 1.1.7 என்ற கொரோனா வைரஸே இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருநாகல் ஆகிய இடங்களிலேயே இந்த வரைஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ கலாநிதி சந்திம ஜீவனந்தர தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply