சாள்ஸ் நிர்மலநாதனின் கருத்துக்கள் ஆதரமற்றவை- தவிசாளர் காட்டம்!

வவுனியாக்குளம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கும் கருத்துக்கள் ஆதாரமற்றவை என்று வவுனியா நகரசபை தவிசாளர் இ. கௌதமன் தெரிவித்துள்ளார்.

வவுனியா சுற்றுலாமைய விடயம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் எந்தவித ஆதாரமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

சுற்றுலாமைய விவகாரத்தில் நகரசபை தவறிழைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நகரசபை எந்த தறவறும் இழைக்கவில்லை. சுற்றுலாமையம் தொடர்பான அனைத்து சட்டரீதியான ஆவணங்களும் எம்மிடம் இருக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் அந்த விடயம் தொடர்பாக முறையாக ஆராயாமல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. அவரது குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கின்றது என அவரிடம் கேட்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுற்றுலாமைய விடயம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் இருக்கும் போது அது தொடர்பாக அவர் கருத்துதெரிவித்தமை நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயல் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Be the first to comment

Leave a Reply