இலங்கையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்! GMOA கோரிக்கை

கொரோனா தொற்றுநோயால் இலங்கை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், நாடு முழுவதும் ஏராளமான நோயாளிகள் காணப்படுவதாகவும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

எனவே, கொரோனா நோயாளிகளைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் செனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நோயாளிகளின் எண்ணிக்கை சுகாதாரத் திறனைக் காட்டிலும் அதிகமாக இருந்தால், சுகாதார ஊழியர்களால் அதை தடுக்கவும், பராமரிக்கவும் முடியாது என்றார்.

எனவே, சிகிச்சை மையங்களின் திறனை அதிகரிக்கவும், தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளின் திறன் மற்றும் வசதிகளை அதிகரிக்கவும், போதுமான ஆக்ஸிஜன் சேமிப்பை உறுதி செய்யவும், சுகாதார பணியாளர்களுக்கு போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

Be the first to comment

Leave a Reply