அரச பொசன் உற்சவத்தை முன்னிட்டு எடுக்கப்படவுள்ள பாரிய நடவடிக்கை

அரச பொசன் உற்சவத்தை முன்னிட்டு மிஹிந்தலை மஹாசேயவுக்கு வெள்ளை வர்ணம் பூசுதல் மற்றும் அங்குள்ள ஏனைய விகாரைகள், தாது கோபுரங்களுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கைகள் நாளை 29ஆம் திகதி காலை 9.00மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பணிப்புரைகளுக்கமைய மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மிஹிந்தலை ரஜ மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வளவாஹெங்குனுவெவ தம்மரதன தேரரின் அனுசாசனத்துடன் அந்த செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேனவின் அனுசரணையுடன் மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர் சட்டத்தரணி டப்ளியு. தயாரத்ன உள்ளிட்ட பணிப்பாளர் சபையின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ணவின் வழிகாட்டலுக்கமைய விமானப் படையினர் மேற்படி செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply