அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் -இராணுவத் தளபதி அதிரடி

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் -இராணுவத் தளபதி அதிரடி

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் -இராணுவத் தளபதி வேண்டுகோள் – முடக்கல் நிலை வரலாம் எனவும் தெரிவிப்பு

பொதுமக்களை அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும் பகுதிகள் முடக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

பல நாட்களிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொண்டு தயாராகயிருப்பது சிறந்தது எனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி எனினும் எதிர்வரும் நாட்களில் கண்டுபிடிக்கப்படவுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையே இதனைத் தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மக்களை மிரட்டவேண்டிய அவசியமோ அல்லது உண்மையை மறைக்க வேண்டிய தேவையோ இல்லை எனத் தெரிவித்துள்ள சவேந்திர சில்வா கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் சிகிச்சை நிலையங்களை அதிகரிக்க இராணுவம் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply