மோசமடையும் இந்தியாவின் நிலைமை? கவலையடைந்த மைக்ரோசாப்ட் தலைமை நிறைவேற்று அதிகாரி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் தற்போதைய சூழ்நிலையால் மனமுடைந்துள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை நிறைவேற்று அதிகாரி சத்ய நாடெள்ளா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய சூழ்நிலையால் மனமுடைந்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சத்ய நாடெள்ளா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய சூழ்நிலையால் மனமுடைந்துள்ளேன். இந்தியாவுக்கு அமெரிக்க அரசு உதவுவதற்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

மைக்ரோசாப்ட் தொடர்ந்து அதன் வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை நிவாரண முயற்சிகளுக்கு பயன்படுத்தும். மேலும், ஒட்சிசன் செறிவு சாதனங்களை வாங்குவதற்கும் மைக்ரோசாப்ட் உறுதுணையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply