முன்னாள் அமைச்சர் ரிசாத்தும் அவரது சகோதரரையும் 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே இந்த அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒரு முறை ரிசாத் பதியுதீனும் அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். எனினும் அதேக்குற்றச்சாட்டில் கடந்த வாரம் அதிகாலைப்பொழுது ஒன்றில் இந்த இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அவர்கள் இருவரையும் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு கீழ் 90 நாட்களுக்கு விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கை பொலிஸாரினால் நீதிமன்றத்திடம் கோரப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Be the first to comment

Leave a Reply