பின்னடித்தது கனடா!! இலங்கை எடுத்த உடனடி முடிவு

ஓய்வுபெற்ற விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் கனடாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டபோதிலும் அவருக்கான அனுமதியை கனடா வழங்காத காரணத்தால் அவரை இத்தாலிக்கான தூதுவராக நியமித்துள்ளது இலங்கை. இதற்கான அனுமதியை நாடாளுமன்ற உயர்சபை வழங்கியுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒட்டாவுக்கான தூதுவராக சுமங்கள டயஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.எனினும் அவரை ஏற்பதற்கான அனுமதியை வழங்குவதில் கனடா பின்னடித்து வந்தது. இந்த நிலையிலேயே அவர் இத்தாலியின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சவுதிக்கான இலங்கையின் தூதுவராக கடந்த நவம்பர் மாதம் அகமட் ஏ. ஜவாத் நியமிக்கப்பட்டிருந்தார்.எனினும் அவர் அந்தப்பதவியை ஏற்காத காரணத்தால் பி.எம். அம்ஷா சவுதிக்கான துதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply