நாட்டிலுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் ஒட்சிசன் அளவு குறித்து அறிவிக்கவும் – வைத்தியர் அசேல குணவர்தன

நாட்டிலுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளின் ஒட்சிசன் அளவு குறித்து அறிவிக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகளுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் தங்களின் முழுத் திறனைப் பயன்படுத்தியுள்ளன என கொரோனா நோய் கட்டுப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 700 ஐ எட்டியுள்ளது.

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு சுமார் 70 புதிய படுக்கைகள் சேர்க்கப்படலாம் என கொரோனா நோய் கட்டுப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை செயற்படாமலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உடனடியாக பணியாளர்களை நியமிக்கத் தீர்மானித்துள்ளனர்.

தற்போது வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ள ஏராளமான நோயாளிகளுக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் தற்போதைய சூழ்நிலையில், ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள ஒட்சிசனின் அளவு குறித்து உறுதிப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியசாலைஅதிகாரிகளுக்குக் கடிதம் ஒன்றை அனுப் பிவைத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply