இலங்கையில் தோன்றிய புதிய வைரஸை எதிர்த்து அஸ்ட்ரா ஜெனெகா சிறப்பாக செயல்படுகின்றது

இலங்கையில் வேகமாக பரவி வரும் COVID-19 இன் புதிய மாறுபாட்டிற்கு எதிராக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகள் நன்கு பயன்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அதிகாரிகள் நேற்று இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் சுகாதார ஊழியர்கள் உட்பட 900,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஏற்கனவே அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் முதல் தடுப்பூசி பெற்றவர்கள் யாருக்கும் இதுவரை COVID-19 இன் புதிய மாறுபாடு பரவவில்லை. ஆனால் எதிர்காலத்தில், அவர்கள் தொற்றுநோயை எதிர்கொள்ள நேரிட்டால், அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து மிகக் குறைவாக இருக்கும்.

இன்று உலகில் கிடைக்கும் அனைத்து தடுப்பூசிகளும் மாற்றப்பட்ட பதிப்புகள் உட்பட உலகில் இருக்கும் COVID-19 இன் அனைத்து வகைகளுக்கும் நன்கு பதிலளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“அதனால்தான் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியமானது, தடுப்பூசிகள் மட்டுமே வழி” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply