வேட்டையாடும் ராஜபக்ச அரசு! கடும் சீற்றத்தில் சஜித்

 நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியாத அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வேட்டையாடி, கைது செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

12 இலட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து அதில் 9 இலட்சம் பேருக்கு முதலாவது தடுப்பூசியை செலுத்திவிட்டு, இரண்டாவது தடுப்பூசியை செலுத்த முடியாது அரசாங்கம் திண்டாடி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை – கிரிந்த பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் இன்று அரசாங்கத்தின் அடக்குமுறை தொடர்வதாகவும், அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேடித் தேடி கைது செய்யப்படுகின்றனர்.

இது ஏகாதிபதித்திய நாடு இல்லை. ஜனநாயக நாடு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். கருத்து வௌியிடும் சுதந்திரத்தை தட்டிப் பறிக்க யாருக்கும் இடமளிக்க முடியாது.

69 இலட்சம் மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியது இவ்வாறு அடக்குமுறை செய்யவா? என சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply