தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரு வாரங்களுக்கு பூட்டு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டமையால் இரு வாரங்களுக்கு அது மூடப்படவுள்ளது.

கொவிட் -19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது .
நேற்றைய தினம் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 42 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Be the first to comment

Leave a Reply