தந்தை செல்வாவின் 44ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவினுடைய 44 ஆவது நினைவேந்தல் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரெட்ணம் அடிகளார், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சிவில் சமூகத்தினர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Be the first to comment

Leave a Reply