ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றவும் – இலங்கை போக்குவரத்து சபை

பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்று மாறு இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று குறித்து அரசாங்கத்தால் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிக்காட்டிக்கமைவாக பஸ்களை சேவையில் ஈடுப்படுத்து மாறு நாட்டில் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து டிப்போக் களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமாக பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாகப் பயணிகளை ஏற்ற நட வடிக்கை எடுத்துள்ளதாக கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார் .

இந்நிலையில், 5000 இற்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply