அதிகரிக்கும் கொரோனா தொற்று – இந்து ஆலயங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து இந்து ஆலயங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆலயங்களில் வழமையான பூசை, தனிநபர் வழிபாடுகள் தவிர்ந்த எந்தவித கூட்டுச் செயற்பாடுகளையோ, ஒன்றுகூடல்களையோ அனுமதிக்கக் கூடாது என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலயங்கள் மற்றும் அதன் வளாகங்களில் சமூக இடைவெளியைப் பேணி, ஒன்றுகூடக் கூடியவர்களின் எண்ணிக்கை 50ஆக வரை யறுக்கப்பட்டுள்ளது. 

Be the first to comment

Leave a Reply