ஹரீன்பெர்ணான்டோவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய முயற்சி – சஜித் குற்றச்சாட்டு -நாடாளுமன்றில் குழப்பநிலை

ஐக்கிய மக்கள்சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோவை கைதுசெய்வதற்கான முயற்சிகள் குறித்து நாடாளுமன்றத்தில்அவரது கட்சிஉறுப்பினர்கள் கரிசனை வெளியிட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குழப்பநிலையேற்பட்டது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்துஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்துஅவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக எதிர்கட்சி தலைவர்சஜித்பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஆளும்கட்சியினருக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

ஹரீன்பெர்ணான்டோவை கைதுசெய்யுமாறுஅரசதரப்பினர் வேண்டுகோள் விடுக்கவி;ல்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முரணாண தகவல்களை வெளியிட்டமைக்காகவே அவருக்கு சிஐடியினர் விசாரணைக்காக அழைப்பு விடுத்துள்ளனர் என ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
சிஐடியினரிடம் வாக்குமூலம்அளித்தவேளை ஹரீன்பெர்ணான்டோ முரணாண தகவல்களை வெளியிட்டுள்ளார் என தெரிவித்த அமைச்சர் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விவாதத்தின் போதும் முரணான கருத்துக்களை வெளியிட்டிருந்தார் எனதெரிவித்தார்.
இதனை தொடர்ந்துபதற்றமானநிலைஉருவானதுடன் இரு தரப்பினரும் கடும் விவாதத்தில்ஈடுபட்டனர்

Be the first to comment

Leave a Reply