சஹ்ரானின் போதனைகளில் பற்கேற்ற மேலும் மூன்று பேர் சிக்கினர்

தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமின் போதனைகளில் பற்கேற்ற மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் குளியாப்பிட்டி – கெக்குனகொல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட தரப்பினரால் 2018ஆம் ஆண்டு பல பகுதிகளில் பயங்கரவாதம் தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், அதில் பங்கேற்றவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply