119 அவசர பிரிவை அநாவசியமாக பயன்படுத்த வேண்டாம் – அஜித் ரோகண

119 அவசர பிரிவை அநாவசியமாகப் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்துள்ளார் .

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் குற்றச்செயல்கள் , அனர்த்தங்கள் மற் றும் திடீர் விபத்துக்கள் தொடர்பில் பொலிஸாருக்கு துரிதமாகத் தெரி விக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் அவசர பிரிவான 119 துரித அழைப்பு சேவையைச் சிலர் அநாவசியமான முறை யில் பயன்படுத்துவதாக அஜித் ரோகண தெரிவித்துள்ளார் .

பொலிஸ் அவசர பிரிவான 119 துரித அழைப்பு தொடர்பில் முன்னெடுக் கப்பட்ட நீண்ட ஆய்விலேயே மேற்படி தகவலானது கண்டறியப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மாத்திரம் குறித்த அவசர பிரிவிற்கு 1,232, 272 அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

குறித்த புள்ளிவிபரங்களுக்கு அமைய நாளொன்றுக்கு 3000 இற்கு அதிக மான அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் , 8000 இறகும் அதிக மானோர் இத்துரித எண்ணைத் தொடர்பு கொள்வதற்கு முயன்றுள்ள தாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வசர பிரிவிற்கு மேற்கொள்ளப்படும் அழைப்புக்களில் 93% மான அழைப்புக்கள் தேவையற்ற விடயங்களுக்காகவே மேற்கொள்ளப் படுவதாகவும் இது அவசர பிரிவின் பணிகளுக்கு இடையூறாகவுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார் .

எனவே அவசர நிலைமைகளின் போது மாத்திரம் இத்துரித அவசர பிரிவு எண்ணை தொடர்புகொள்ளுமாறு பொது மக்களிடம் அஜித் ரோகண கோரிக்கை விடுத்துள்ளனர் .

காணி தகராறு , காசோலை மோசடிகள் மற்றும் பிற விடயங்கள் தொடர் பாக அவசர பிரிவான 119 துரித அழைப்பிற்கு அறிவிப்பதால் எவ்வித பய னையும் பெற்றுக்கொள்ள முடியாது என மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply