யாழ்.பொலிஸ் நிலையத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் உள்பட வடக்கில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 788 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட உத்தியோகத்தர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு மற்றும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ஆகிய இடங்களில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் மன்னார் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு கொரோனா அறிகுறிகளுடன் சென்றவர்கள். ஒருவர் வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பெற்றவர்.

மல்லாவி வைத்தியசாலைக்குச் சென்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply