பாதுகாப்பற்ற கடவையால் வவுனியாவில் இடம்பெற்ற பாரிய விபத்து!

வவுனியா திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையால் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகையிலத கடவையில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதியே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 40 வயதுடைய நிசாகரன் என்பவரே புகையிரதத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருநாவல்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் புகையிரதம் வருவதனை அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக இப்பகுதியில் பல விபத்துக்கள் இடம்பெறும் நிலை காணப்பட்ட போதிலும் அப்பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் ஒத்துழைப்பால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் குறித்த புகையிரதக் கடவையினை மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிள் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மோட்டார் சைக்கிள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply