குருணாகலில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

குருணாகல், கனேவத்த பகுதியின் தித்தவெல்லகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்குப்பின்னர் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் குறிப்பிட்ட இடங்களை தனிமைப்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply