களுத்துறையில் 16 பேருக்கு கொரோனா! 200 பேர் தனிமைப்படுத்தலில்..

களுத்துறை, பயகல மற்றும் ஹொரகஸ்கல பொலிஸ் பகுதிகளில் நேற்று 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை அடுத்து சுமார் 200 கிராமவாசிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொரோனா பரவுவதை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அல்லது நாளை அந்த கிராம மக்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், புத்தாண்டு விழாக்களைத் தொடர்ந்து கம்பஹாவில் ராகம, படுவாவத்தை மற்றும் திவுலபிட்டி பொலிஸ் பகுதிகளில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply