பாடசாலைகள் மூடப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏதேனுமொரு பாடசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடளாவியரீதியில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply