விஜேதாச ராஜபக்ஷவின் மகன் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜேதாச ராஜபக்ஷவின் மகன் ரகிதா ராஜபக்ஷவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ராஜகிரியவில் நடந்த விபத்து தொடர்பாகவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து ஏற்பட்டதன் காரணமாக கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் செலுத்திய வாகனம் நேற்று இரவு 10.45 மணியளவில் மற்றொரு கார் மீது மோதியதில் கர்ப்பிணிப் பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply