மஹரகம – பமுனுவ பிரதேசத்தில் 52 பேருக்கு கொரோனா

மஹரகம – பமுனுவ பிரதேசத்தில் 52 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புத்தாண்டுக்குக் காலத்திற்கு பிறகு பமுனுவ வணிகவளாகத்தில் 17 பேர் மற்றும் அரசங்க வங்கியில் 35 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து , குறித்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் மீது மேற்கொண்டு பரிசோதனையில் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் நேற்றைய தினம் அரச வங்கியில் கொரோனா தொற் றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மேலும் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

பமுனுவ வணிகவளாகத்தில் 17 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இரண்டு ஆடைவிற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply