உயிர்த்தஞாயிறுதாக்குதல் விசாரணைகள் தொடர்பான முக்கிய தகவல்கள்இன்று நாடாளுமன்றத்தில் – அம்பலப்படுத்துவார்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன்பெர்ணாண்டோவும் மனுசநாணயக்காரவும் உயிர்த்தஞாயிறுதாக்குதல் விசாரணைகள் தொடர்பான முக்கிய தகவல்களை இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளனர்.
முக்கிய சூத்திரதாரி என அரசாங்கம் தெரிவிக்கும் நவ்பர்மௌலவி ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் நிறுத்தப்படாதது ஏன் என்பது குறித்த முக்கிய விபரங்களையும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தவுள்ளனர்.

விசாரணைகளைமூடிமறைக்க முயலும் தனிநபர்கள்,முக்கியமான விடயங்களை கண்டுபிடிக்கும் நிலையிலிருந்த வேளைஇடம்மாற்றப்பட்ட சிஐடி உத்தியோகத்தர்கள் போன்ற விடயங்களையும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அம்பலப்படுத்தவுள்ளனர்.
இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஆனால் இன்னமும் விசாரணைக்கு உட்படுத்தப்படாமலிருக்கின்ற சில நபர்கள் குறித்த விபரங்களையும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடவுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதலிற்கு முன்னரும் தாக்குதலின் பின்னரும் இடம்பெற்ற பல விடயங்களையும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பகிரங்கப்படுத்தவுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply