சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை – லசந்த அழகிய வண்ண உறுதி

உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலையில் எந்த மாற்றமும் இருக்காது என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான லசந்த அழகிய வண்ண தெரிவித்துள்ளார் .

நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப் பின்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 1493 ரூபா எனவும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் 597 ரூபா மற்றும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் 298 ரூபாவாக உள்ளதுடன், இவற்றின் விலைகளில் அதிகரிப்பு இருக்காது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

Be the first to comment

Leave a Reply