கொழும்பு துறைமுக சட்டமூலத்தால் நெருக்கடிக்குள் அரசு – எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்தி தேரர்கள் முதல் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி வரை விமர்சனத்துக்குள்ளாகியுள்ள கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு உத்தேச சட்ட மூலத்தால் அரசாங்கம் பெரும் இக்கட்டில் சிக்கியுள்ளது.

இந்த சர்ச்சையை தெளிவுபடுத்தும் வகையிலும் பௌத்த மத தலைவர்களின் எதிர்ப்பை தணிக்கும் வகையிலுமான நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இதன்படிஅரசபிரதிநிதிகள் மல்வத்தை மற்றும் அஸ்கிரியபீடாதிபதிகளை சந்தித்து உத்தேச சட்டமூலம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர். அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அஜித் நிவாட் கப்ரால் இருவரும் பௌத்தமத பீடாதிபதிகளை சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி பிரதமர் சார்பில் புதிய சட்டமூலம் குறித்து பௌத்தமதபீடாதிபதிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காகவே இந்த சந்திப்பு என இராஜாங்க அமைச்சர் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஏதாவது கரிசனையிருந்தால் அதனை வெளிப்படுத்துமாறு தெரிவித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அவர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் எதிர்வரும் வாரங்களில் பொதுமக்களிற்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் தெரிவிப்பது போல நாட்டை சீனாவின் கொலனியாக மாற்றப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply