கிளிநொச்சி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

கிளிநொச்சி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் கிளிநொச்சியிலுள்ள கோணாவில் மத்தி பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தினைச் சேர்ந்த செல்வநாயகம் விதுசன் (வயது -25) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.

வீட்டின் பின்பகுதியின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தெரியவரவில்லை, இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதே வேளை கடந்த வாரம் இதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் யுவதி ஒருவரும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக தற்கொலைகள், அதிகரித்து வருகின்றதோடு குறிப்பாக இளம் சமூகத்தினர் அதிகளவில் தற்கொலை செய்துகொள்கின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Be the first to comment

Leave a Reply